தகராறில் ஒருவர் கைது
தேனி: ஓடைப்பட்டி வேப்பம்பட்டி மெயின்ரோடு கிழக்கு தெரு முருகன் 58.அதேப்பகுதி பெத்தனசாமி கோயில் அருகே கதிரேசன் 34, குடும்ப பிரச்னை காரணமாக குடிபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். அவரை முருகன் தட்டிக் கேட்டார். முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தார். கதிரேசனை ஓடைப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
நகை, பணம் திருட்டு
தேனி: சீலையம்பட்டி மேற்கு தெரு முத்துப்பாண்டி 42. இவர் வேலைககு சென்றுவிட, மனைவி பாக்கியலட்சுமி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பஸ் ஏற்றிவிட, வீட்டின் கதவை பூட்டாமல் திறந்த நிலையில் விட்டு சென்றார். பின் வீட்டில் வந்து பார்த்தபோது கப்போர்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 6 கிராம் உள்ள ஒரு ஜோடி கம்மல், பணம் ரூ.3 ஆயிரம் என ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை. புகாரில் சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
தேனி: கோட்டூர் தெற்குத் தெரு விவசாயி தமிழ்வளன் 60. இவர் கடந்த ஜனவரி 29 ல் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தனது டூவீலரை சீலையம்பட்டி கண்மாய் செல்லும் ரோட்டில் நிறுத்திவிட்டு, வயலுக்குச் சென்றார். ஒரு மணி நேரத்திற்கு பின் டூவீலரை பார்த்தபோது அதனை காணவில்லை. வீரபாண்டி எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் விசாரித்து வருகிறார்.
மது பாட்டில் பதுக்கல்
தேனி: பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு வீரன் 63. இவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக 7 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினார். தேனி மதுவிலக்கு அமலாகத்துறை போலீசார் கைது செய்தனர்.
முதியவர் உயிரிழப்பு
தேனி: குச்சனுார் மெயின் ரோட்டில் 65 வயது மதிக்கப்பட்ட ஆண் உடல் இறந்த நிலையில் கிடப்பதாக மார்க்கையன் கோட்டை வி.ஏ.ஓ., பால்பாண்டி தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போது பாதிக்கப்பட்ட நபர் வலிப்பு நோய் பாதித்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரிக்கையில், 65 வயது மதிக்கத்தக்கவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த முதியவர் ஜனவரி 29ல் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஹிந்து எழுச்சி முன்னணியினர் மீது வழக்கு
தேனி: மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணி பொதுச் செயலாளர் லோகநாதன். கம்பம் நகர துணைத் தலைவர் அய்யப்பன் தலைமையில் கட்சியின் 10 பேர் இணைந்து, பாரத மாதா சிலை ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீசாரின் உத்தரவை மீறி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் டிராக்டரில் பாரத மாதா சிலையை வைத்து தாத்தப்பன் குளத்தில் துவங்கி தங்கவிநாயகர் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர், இவர்கள் மீது கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மணல் திருட்டு: இருவர் கைது
தேனி: உத்தமபாளையம் தாலுகா ஓடைப்பட்டி எஸ்.ஐ., கண்ணன் சிறப்பு எஸ்.ஐ., செல்வம் தலைமையிலான போலீசார், தென்பழனி அருகில் உள்ள மஞ்சள் நதி ஓடைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஓடைப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தெரு சீனிசெல்வம் 27, நந்தவனத்தெரு சுரேஷ் 38, ஆகியோர் டிரைலருடன் கூடிய டிராக்டரில் ஒரு யூனிட் மணலை திருடி கடத்த முயற்சித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் மணல், டிரைலருடன் கூடிய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இடையூறு செய்தவர் கைது
தேனி: உத்தமபாளையம் தாலுகா கோவிந்தன்பட்டி பட்டாளம்மன் கோயில் தெரு சந்தோஷ்குமார் 22. இவர் நேற்று காலை 10:30 மணிக்கு தனது வீட்டின் முன், குடும்ப பிரச்னை காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் ஆபாசமாக பேசினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பெண் காயம்: இருவர் கைது
பெரியகுளம்: டி.கள்ளிப்பட்டி நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்த சித்தார்த்தன் 30. அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டலுக்கு காய்கறிகளை சப்ளை செய்த அதே ஊர் அழகர்கோயில் தெருவை சேர்ந்த நாகபாண்டி 30. இருவரும் நண்பராகினர். சித்தார்த்தன் 2020 ல் மதுரை செக்காணுரணியைச் கருப்பு என்பவரிடம் ரூ.2.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு நாகபாண்டி காசோலை வழங்கியுள்ளார். நாகபாண்டி வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. உசிலம்பட்டி நீதிமன்றத்தில் நாகபாண்டி மீது காசோலை மோசடி வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணை செலவுக்கு சித்தார்த்தன் பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கை விரைவில் முடிக்குமாறு நாகபாண்டி, இவரது நண்பர்கள் தமிழ்செல்வன், சின்ன நாகப்பன், ஹரி ஆகியோர் சித்தார்த்தனிடம் தகராறு செய்து, கல்லால் எறிந்துள்ளனர். இதில் சித்தார்த்தன் உறவினர் கண்ணகி 48. மீது கல்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் நாகபாண்டி, தமிழ்செல்வனை கைது செய்தனர்.
மனைவி மாயம்: கணவர் புகார்
போடி: துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 31. இவரது மனைவி அம்சவள்ளி 29. இருவரும் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்சவள்ளி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. முத்துப்பாண்டி புகாரில் தாலுகா போலீசார் காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.