திருப்புளியால் குத்தியவர் கைது
கடமலைக்குண்டு: மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் 40, இதே ஊரைச் சேர்ந்த அனிதா மகன் ராகுல் தேவன் இறப்புக்கு மாணிக்கம் தான் காரணம் என்று கூறி, அனிதாவின் உறவினர் பிச்சை முருகன், மாணிக்கத்துடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஏப்ரல் 10ல் கடமலைக்குண்டு முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கத்தை பிச்சைமுருகன் திருப்புளியால் உடலில் பல இடங்களில் குத்தியதில் காயப்படுத்தினார். அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணிக்கம் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் பிச்சை முருகனை கைது செய்தனர்.
தோட்டத்தில் விவசாயி இறப்பு
தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 62. வாழை இலை வியாபாரம் செய்தார். தோட்டத்தில் வாழை இலை அறுக்கச்சென்றார். இதே ஊரைச்சேர்ந்த குபேந்திரன், பாண்டி மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் உனது தந்தை தோட்டத்தில் மயங்கி கிடப்பதாக தெரிவித்தார். கிருஷ்ணமூர்த்தி பார்க்கையில் பாண்டி இறந்து கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
போடி: ராசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தி 52. இங்கு நடந்த கோயில் திருவிழா முளைப்பாரி ஊர்வலத்தில் சாந்தியின் கொழுந்தன் மணிமுத்து என்பவருக்கும், ரவிச்சந்திரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ரவிச்சந்திரன் அவரது மகன் குமரன், நவீன் மூவரும் சேர்ந்து அப்பகுதியில் நடந்து சென்ற சாந்தியை வழி மறித்து, அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். புகாரில் போடி தாலுாகா போலீசார் ரவிச்சந்திரன், குமரன், நவீன் ஆகியோரை விசாரிக்கின்றனர்.
மனைவியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் 31. இவரது மனைவி வனிதா 27. இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதனை தட்டிக்கேட்ட வனிதாவின் அம்மா பழனியம்மாள் 45. வனிதாவை, காமராஜ் கத்தியால் குத்தி காயப்படுத்தினார். இருவரும் தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

