ADDED : ஏப் 15, 2025 06:24 AM
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
தேனி: பழனிசெட்டிபட்டி தெற்கு வாஞ்சிநாதன் தெரு சாந்தி 48. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ராஜப்பன் 60, இவரது மகன் திரவியபாண்டி 24. இரு குடும்பத்தினருக்கும் பிரச்னை இருந்தது. இந்நிலையில் சாந்தி வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, ராஜப்பன், திரவியபாண்டி இருவரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். சாந்தி புகாரில் இருவர் மீதும் வழக்கு பதிந்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டாஸ்மாக் பணியாளர் மீது தாக்குதல்
தேனி: தேவதானப்பட்டி பொன்ராஜ் தெரு காமாட்சி 50. மதுராபுரி அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார். கடை அருகே பார் வைத்திருக்கும் ஸ்டாலின் டாஸ்மாக் கடைக்குள் சென்று பணியில் இருந்த காமாட்சி, அவருடன் இருந்து ரவி என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காமாட்சி புகாரில் அல்லிநகரம் போலீசார் ஸ்டாலின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.