கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
தேனி: கோடாங்கிபட்டி சிவசுப்பிரமணிய கோயில் தெரு மாரியப்பன் 26. இவருக்கு கோடாங்கிபட்டி மேற்குத்தெருவில் சொந்தமாகன 9 சென்ட் இடம் உள்ளது. அந்த நிலத்தில் அதேத் தெருவை சேர்ந்தராஜா 29, தனது டிராக்டரை நிறுத்தியிருந்தார். பின் நிலத்தை சுத்தம் செய்வதற்கான மாரியப்பன்,ராஜாவிடம் டிராக்டரை, நிலத்தை விட்டு வேறு இடத்தில் தள்ளி நிறுத்த வலியுறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, இது என்னுடைய இடம், இங்கு வந்தால் டிராக்டரை ஏற்றி கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்தார். பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள், ராஜா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றார்.
தகராறு செய்தவர் மீது வழக்கு
ஆண்டிபட்டி: தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 42, வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் ஏலம் எடுத்து நிர்வாகம் செய்து வரும் தமிழரசன் என்பவரிடம் காவலராக வேலை பார்த்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் வைகை அணையில் மீன்கள் திருட்டை தடுக்க, சுரேஷ், வெற்றி கரிகாலன் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது வைகை அணை நீர்த்தேக்க பகுதி குருவியம்மாள்புரம் ஆர்ச் ஈஸ்வரன் கோயில் அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த மரபாண்டி மீன்பிடி வலையுடன் நின்றுள்ளார். அவரிடம் காவலர்கள் விசாரித்த போது தகாத வார்த்தைகளால் அசிங்கமாக பேசியுள்ளார். இது குறித்து சுரேஷ் புகாரில் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் எரிப்பு
பெரியகுளம் : டி.கள்ளிப்பட்டி தனுஷ்கோடி கோடி மண்டபம் பின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் 36. மீன் வியாபாரி. இவரது டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு, காலையில் பார்க்கும்போது தீ வைத்து எரிந்த நிலையில் இருந்தது. தென்கரை போலீசார் இருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தில் பெண் பலி
தேனி: அல்லிநகரம் அழகர்சாமி தெரு கூலித்தொழிலாளி அம்மணியம்மாள். கடந்த ஏப்.22ல் இரவு தேனி பெரியகுளம் ரோடு அல்லிநகரம் தனியார் மஹால் அருகே ரோட்டை கடந்து சென்றார்.அப்போது நிலக்கோட்டை செட்டியப்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜ் ஓட்டி வந்த டூவீலர், அம்மணியம்மாள் மீது மோதியது. பெண்ணின் பின் தலையில் காயம் ஏற்பட்டு, மயங்கினார். 1 தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

