கஞ்சா பதுக்கியவர் கைது
பெரியகுளம்: காந்திநகரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி 24. சுடுகாடு அருகே 31 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். இது குறித்து கிடைந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வடகரை எஸ்.ஐ., தெய்வக்கண்ணன், தங்கப்பாண்டியை கைது செய்தார். கஞ்சா விற்ற பணம் ரூ.4,500ஐ கைப்பற்றப்பட்டது.
தாயார் மாயம்: மகன் புகார்
போடி: மேலச்சொக்கநாதபுரம் அறிஞர் அண்ணா தெரு ஒச்சம்மாள் 80. இவர் 3 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மகன் அன்பழகன் போலீசாரிடம் புகார் செய்தார். போடி தாலுகா போலீசார், காணாமல் போன ஒச்சம்மாளை தேடி வருகின்றனர்.
விஷம் குடித்து தற்கொலை
தேவதானப்பட்டி: எருமலைநாயக்கன்பட்டி சாவடி தெரு தனுசு 65. மது பழக்கத்திற்கு அடிமையானார். இவரது மனைவி செல்வராணி 55. தனுசுக்கு அறிவுரை வழங்கினார். இதனால் மன வேதனையில் தனுசு, விஷம் குடித்து பலியானார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் சுற்றுலா பயணி காயம்
பெரியகுளம்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலத்தைச் சேர்ந்த ஹேமாவதி 39. தனது மாமியார் ஜெயலட்சுமி 55, குடும்பத்துடன் கும்பக்கரை அருவிக்கு குளித்துவிட்டு கார் பார்க்கிங் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பின்னால் வந்த வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த பேட்டரி கார், ஜெயலட்சுமி மீது மோதியது. காயமடைந்த ஜெயலட்சுமி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து ஏற்படுத்திய தேவதானப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் விக்கிரபாண்டியனிடம் 30, வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
2 டூவீலர்களை எரித்த மூவர் கைது
ஆண்டிபட்டி: ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சக்திகுமார் 32. க.விலக்கு அருகே தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்தார். ரங்கசமுத்திரம் பஸ் ஸ்டாப் அருகே ராஜகோபால் மகன் ராஜேஷ் குமாரிடம் 26, போலீசார் குடும்ப வழக்கு தொடர்பாக விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை ராஜேஷ்குமார் தரக்குறைவாக பேசியதால், சக்திகுமார் கண்டித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கு வந்ததும், ராஜேஷ்குமார் அவரது நண்பர்கள் மணிகண்டன் 24, கோகுல் ஆகிய மூவரும் சக்திகுமாரின், 2 டூவீலர்களை தீ வைத்து எரித்தனர். இதனை தடுக்க வந்த சக்திகுமாரின் மனைவி, உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சக்திகுமார் புகாரில் வைகை அணை போலீசார் மூவரையும் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
ஆட்டோ -மினி லாரி விபத்தில் ஒருவர் பலி
கூடலுார்: கேரளா பீர்மேடைச் சேர்ந்தவர் வர்கீஸ் 55. இவரது மகன் சிபு 25, உறவினர்கள் உண்ணி, சந்தோஷ் ஆகிய 4 பேரும் குமுளியில் இருந்து ஆட்டோவில் கம்பத்திற்கு வந்தனர். சிபு ஆட்டோவை ஓட்டினார். கூடலுார் புறவழிச் சாலையில் வரும்போது கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச்சென்ற மினி லாரி, ஆட்டோ மீது மோதி விபத்து நடந்தது. இதில் வர்கீஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மூன்று பேரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கூடலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.