வழிப்பறி செய்த இருவர் கைது
தேனி: அல்லிநகரம் மண்டுக்கல் கருப்பசாமி கோயில் தெரு மாரியப்பன் 52. இவர் நேற்று வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்கு சென்றார். கண்ணீஸ்வர முடையார் கோயில் அருகே தனியார் திருமணம் மண்டபம் அருகே சென்றபோது, வீரபாண்டியை சேர்ந்த அஜித், உத்தமபாளையத்தை சேர்ந்த அரசாங்கம் ஆகியோர் இணைந்து, மாரியப்பன் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை வழிபறி செய்து சென்றனர். பின் மாரியப்பன், போலீசார் உதவியுடன், அஜித், அரசாங்கத்தை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
ஆற்றில் முழ்கிய வாலிபர் பலி
தேனி: திருப்பூர் செட்டிபாளையம் கவுரி 52. இவரது மகன் மணிகண்டன் 26. குடும்பத்துடன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு வந்து அம்மன் தரிசனம் முடித்துவிட்டு, முல்லைப் பெரியாற்றில் குளிக்க மணிகண்டன் நினைத்தார். குடும்பத்தினர் முல்லையாற்றின் கரைப் பகுதியில் அமர, மணிகண்டன் குளிக்க சென்றார். நீருக்குள் சென்றவர், வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை.
அருகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய மணிகண்டனை மீட்டு கொண்டு வந்தனர். வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் விசாரிக்கிறார்.