துாக்கிட்டு தற்கொலை
தேனி: வீரபாண்டி உப்பார்பட்டி கருப்பசாமி கோயில் தெரு கற்பகராணி 25. இவர் பழனிசெட்டிபட்டி துணிக்கடையில் பணி புரிகிறார். இவரது கணவர் செல்வகுமார், வயிற்றுவலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மே 19ல் வழக்கல் போல் வேலைக்கு சென்றவர், வயிற்றுவலி அதிகமானதால் மீண்டும் வீட்டிற்கு வந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் மோதி சிறுவன் பலி
தேனி: தப்புக்குண்டு கருப்பசாமி கோயில் தெரு செல்வேந்திரன். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் டெக்ஸ்டைல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி அருள்ஜோதி, மகன் யோகன் 5, மகள்கள் பிரேமிகா, சஷ்டிகா ஆகியோருடன் சொந்த ஊரான வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்கு வந்து தப்புக்குண்டுவில் கணவர் வீட்டில் தங்கினர். இந்நிலையில் செல்வேந்திரன் தந்தை பேரன் யோகனை கடைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் முருகபாண்டி ஓட்டி வந்த லோடு வாகனம் மோதி விபத்து நடந்தது.இதில் 5 வயதான சிறுவன் யோகன் காயம்பட்டு உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் வேன் டிரைவர் முருகபாண்டி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.