ஓய்வு அரசு ஊழியர் காயம்
தேனி: கோட்டைகளம் விசாலாட்சி 65, ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சின்னமனுார் முத்துலாபுரத்தில் உள்ள தோட்டாத்திற்கு ரஞ்சித்குமார் என்பவருடன் டூவீலரில் சென்றார்.
உப்பார்பட்டி அருகே சென்ற போது டூவீலர் மீது மதுரை உசிலம்பட்டி கீழப்புதுார் ஹரிசுர்ஜித் 24, ஓட்டி வந்த டூவீலர் மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த விசாலாட்சி வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தேனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
தேனி: பழனிசெட்டிபட்டி சுபாஷ்சந்திர போஸ் தெரு முருகன் 49. வீரபாண்டி பேரூராட்சியில் பணிபுரிகிறார். இவரது நண்பர் கணேசன் என்பவரது டூவீலரை பயன்படுத்தி வந்தார். அதனை மே 22ல் வீட்டு அருகில் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்த போது டூவீலரை காணவில்லை. முருகன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சமையல் மாஸ்டர் காயம்
தேனி: கருவேல்நாயக்கன்பட்டி ரெங்கநாதன் 54, சமையல் மாஸ்டர்.இவர் தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆர்.டி.ஓ., அலுவலக ரோட்டில் டூவீலரில் சென்றார். அவரது டூவீலர் மீது மதுரை சுப்ரமணியபுரம் ரமேஷ்பாண்டியன் ஓட்டிய கார் மோதியது. காயமடைந்த ரெங்கநாதன் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவரது மனைவி சுதா புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.