ADDED : ஜூலை 17, 2025 03:27 AM
கால்வலியால் தற்கொலை
பெரியகுளம்: எ.புதுக்கோட்டை நேரு நகர் சந்திரசேகரன் 47. சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி, வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்த சந்திரசேகரனின் வலது காலில் பிளேட் வைக்கப்பட்டது. இதுனால் தொடர் கால் வலியால் அவதிப்பட்டார். மனவேதனையில் விஷம் மருந்தை குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
மூன்று வாகனங்களில் டீசல் திருட்டு
பெரியகுளம்: மேல்மங்கலம் வடக்கு தெரு ரமேஷ் 42. தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவர் வடுகபட்டி பாலகிருஷ்ணா பெட்ரோல் பங்க் அருகே காலியிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் 100 லிட்டர் டீசல், இதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பள்ளி பஸ், வேன் என மூன்று வாகனங்களில் மொத்தம் ரூ.26 ஆயிரத்து 500 மதிப்புள்ள 260 லிட்டர் டீசலை திருடிச் சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
தேனி: மதுவிலக்கு போலீசார் க.விலக்கு அருகே அண்ணா நுாற்பாலை எதிர்புறம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக டூவீலரில் வந்த ஆண்டிபட்டி முத்தனம்பட்டி சிவனேசன் 24, க.விலக்கு ஓடை தென்புறம் தீபன் 20, ஆகிய இருவரை சோதனை செய்தனர். அவர்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற ரூ.40 ஆயிரம் 2 கிலோ மதிப்புள்ள கஞ்சாவை கைப்பற்றி, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டூவீலர், அலைபேசிகளையும் கைப்பற்றினர். பணப்பாண்டி, ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூதாட்டி தற்கொலை
தேனி: அல்லிநகரம் வடக்கு மச்சால் தெரு ராஜேஸ்வரி 60. உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் விஷம் குடித்தார். இதனை வெளியூரில் இருந்த மகள் பானுப்பிரியாவிற்கு தகவல் கூறினார். பானுப்பிரியா சகோதரர் நாகபாண்டியின் மனைவி வனிதாவிற்கு தகவல் தெரிவித்தார். வனிதா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.