sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : ஜூலை 22, 2025 04:26 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடிப்படியில் தவறி விழுந்தவர் பலி

கடமலைக்குண்டு: கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் 35, திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. கடமலைக்குண்டில் தனியார் காஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை கடமலைக்குண்டு தனியார் மருத்துவமனையிலும் கூடுதல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். மனைவி மாரியம்மாள் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் மீது லாரி மோதி மனைவி பலி

உத்தமபாளையம்: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் முஸ்லீம் தெருவில் வசிக்கும் ரியாஸ் அகமது 34, தனது மனைவி பரக்கத்நாஜியா 27, மகன் முகமது அமீர் 5 ஆகியோருடன் கம்பம் வந்து விட்டு தனது டூவீலரில் உத்தமபாளையம் நோக்கி சென்றுள்ளார். கோவிந்தன்பட்டி அருகே பின்னால் வேகமாக வந்த லாரி டூவீலரில் மோதியது. டூவீலரில் பயணம் செய்த கணவன், மனைவி, மகன் தூக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மூன்று பேர்களையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் மனைவி பரக்கத்நாஜியா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்., காயங்களுடன் அப்பா, மகன் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் லாரி டிரைவர் வாரியை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். உத்தம பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை - தேடி வருகின்றனர்.

துாக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி : வைகை அணை கே.கே.காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார் 30, குடிப்பழக்கம் இருந்த இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் பிரச்னை செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த உதயகுமார் பிரச்னை செய்த போது, மனைவி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். கணவர் தூங்கி இருப்பார் என்று திரும்ப வீட்டிற்கு வந்து மனைவி பார்த்த போது உதயகுமார் வீட்டில் இருந்த மின்விசிறியில் துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார். மனைவி ஷீலா புகாரில் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி திரும ணம் தாய் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு ஜூன் 27ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு உடந்தையாக சிறுமியின் தாயார் சந்தியாதேவி 35. இவரின் தம்பியும் சிறுமியின் கணவருமான பிரேம்நாத் 32, மற்றும் உறவினர் சாந்தி 55. ஆகியோர் மீது பெரியகுளம் ஒன்றியம் ஊர்நல அலுவலர் விஜயலட்சுமி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜெயராணி பிரேம்நாத் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.--

நடன பெண்ணுடன் சென்றவருக்கு கத்தி குத்து: மூவர் மீது வழக்கு

தேனி: ச மதர் மபுரம் பி.டி.ராஜன் தெரு முத்து இருளப்பன் 29. ஆட்டோ டிரைவர். இருமாதங்களுக்கு முன் தேனி பங்களாமேடு சூர்யபிரகாஷ் மூலம் அவரது தோழியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுபவர். இந்நிலையில் இருளப்பனும், நடன பெண்ணும் இரவில் ஆட்டோவில் சென்றனர்.அதனை சூர்யபிரகாஷ் கண்டித்தார். இதனை மீறி ஆட்டோ டிரைவர் சென்றார். இதனால்ஜூலை 20 இரவு சமதர்மபுரத்தில் இருளப்பனை சிவன், சூர்யபிரகாஷ், சூர்யா ஆகியோர் கத்தியால் கழுத்தில் குத்தினார். பின் ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தினர். காயமடைந்த இருளப்பன் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளார். புகாரில் சூர்யபிரகாஷ், சூர்யா, சிவன் ஆகிய மூவர் மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மூவர் அலை பேசி திருட்டு

தேனி: -மதுரை திருமங்கலம் ஜவஹர் நகர் மகேஷ் கண்ணன் 50. இவரது நண்பர் வெள்ளைச்சாமி என்பவரின் தேனி சிவராம் நகர் வீட்டின் மாடியில் ஜூலை 19ல் நண்பர் விக்னேஷ்குமார் எனமூவரும் மாடியில் கதவை திறந்த நிலையில் விட்டு துாங்கினர்.

காலையில் எழுந்து பார்த்த போது, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள மூன்று பேரின் அலைபேசிகள் திருடி போயிருந்தன. மகேஷ்கண்ணன் புகாரில் தேனி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us