sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஆக 07, 2025 08:11 AM

Google News

ADDED : ஆக 07, 2025 08:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர் விபத்தில் இருவருக்கு காயம்

தேனி: பூதிப்புரம் மூட்டத்தேவர் தெரு காமராஜ் 55. தனியார் பள்ளியின் பஸ் கண்டக்டர். இவர் கடந்த ஆக.4ல் இரவு 7:00 மணிக்கு பூதிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே மருந்து கடையில் மாத்திரை வாங்கிவிட்டு, ரோட்டின் ஓரத்தில் நண்பர் வீரமணியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பூதிப்புரம் மேற்கு நாயக்கர் தெரு செல்வஈஸ்வரன் 43, ஓட்டிவந்த டூவீலர் காமராஜ் மீது மோதியது. இதில் காமராஜ், செல்வஈஸ்வரன் உள்ளிட்ட இருவரும் காயம் அடைந்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தங்கநகைகள், நிலப்பத்திரங்கள்

திருட்டு

தேனி: கோட்டூர் தர்மாபுரி மெயின் ரோடு, பஞ்சாயத்து போர்டு தெரு ஆயம்மாள் 65. இவரது வீட்டில் ராகுல் வசித்து வந்தார். ஆயம்மாளுக்கும், அவரது சகோதரருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார். ஆயம்மாள், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அப்போது வீட்டில் இருந்த 3 நிலப்பத்திரங்கள், 4 பவுன் தங்க நகைகளை காணவில்லை என்ற ஆயம்மாள் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பீரோவை உடைத்து நகை திருட்டு

கடமலைக்குண்டு: அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கமலாட்சி 40, இவரது கணவர் இறந்து விட்டார். பழக்கடை வைத்து வியாபாரம் செய்யும் இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ஆகஸ்ட் 3ல் வீட்டை பூட்டி, சாவியை வழக்கம்போல் மரக்கட்டை கைப்பிடி கதவின் மேல் வைத்துவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.22,500 மதிப்பிலான நகை திருடுபோனது. கமலாட்சி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவி புகாரில் கணவர் உட்பட

4 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ஜி.உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் வினோதினி 22, இவருக்கும் கரட்டுபட்டியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 15 பவுன் நகை மற்றும் பாத்திரங்கள் சீதனமாக கொடுத்துள்ளனர். கணவன் மனைவி தனிக்குடித்தனம் நடத்தினர். அவர்களுக்கு மூன்று வயதில் மகன் உள்ளார். வினோதினியிடம் இருந்து 6.5 பவுன் நகையை வாங்கி கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அடகு வைத்து அதை திருப்பி தர மறுத்துள்ளனர். வினோதினி வரதட்சணை குறைவாக கொண்டு வந்ததாக பேசி அடித்தும்,கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக மிரட்டினராம். வினோதினி புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் ராஜீவ் காந்தி, மாமனார் ஈஸ்வரன், மாமியார் உமா, நாத்தனார்கள் பிரபா தேவி, பிரீத்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சந்தன மரக்கட்டைகள் கடத்திய

2 பேர் கைது

கூடலுார்: கேரளா குமுளி அருகே சந்தன மரக்கட்டைகள் கடத்துவதாக வந்த தகவலைத் தொடர்ந்து ரேஞ்சர் ராஜன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். எல்லைப் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த 89 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்து, இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த மாரிமுத்து 42, குமுளி அருகே முறுக்கடியை சேர்ந்த பிரசாந்த் 40, ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் சந்தன மரக்கட்டைகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆட்டோக்கள் மோதி

5 மாணவர்கள் காயம்

தேனி : சிவராம்நகர் மணிகண்டன் 37. இவர் தனது மகள் ஜீவிதாபாலா, மணிகண்டன், முகம்மது அப்ரின், விஷ்ணு, முகம்மது சர்தார் ஆகிய மாணவர்களை ஆட்டோவில் பள்ளிக்கு ஏற்றி சென்றார். ஆக.5 மாலையில் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்தியிருந்தார். அப்போது வடபுதுப்பட்டி ஆட்டோ டிரைவர் பாலசுப்பிரமணி 41, தனது ஆட்டோவில் மாணவி பிரகதீஸ்வரி ஏற்றிக் கொண்டு, மணிகண்டன் ஆட்டோ அருகில் சென்ற போது பிரேக் பிடித்ததால் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டன், பாலசுப்பிரமணியன், சிவராம் நகர் பயணி மணிகண்டன் 30, மாணவர்கள் முகமது அப்ரின் 9, ஜீவிதாபாலா 11, முகம்மது சர்தார் 7, உட்பட ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதில் மாணவர் விஷ்ணு 5, மாணவி பிரகதீஸ்வரி 11, இருவரும் மதுரை, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us