ADDED : ஆக 08, 2025 03:18 AM
சிறுமி திருமணம்: பெற்றோர்கள்
உட்பட ஐவர் மீது போக்சோ வழக்கு
பெரியகுளம்: பெரியகுளம் தாமரைக்குளம் மகாத்மா காந்திஜி தெரு வீரக்குமார் 29. கோவை பகுதியைச் சேர்ந்த உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, அருகே வசித்த 17 வயது சிறுமியை காதலித்தார். சிறுமியின் பெற்றோர்கள் கனகராஜ், ரமாதேவி ஆகியோர், சிறுமியை வீரக்குமாருக்கு திருமணம் செய்து கொடுக்க, 18 வயது பூர்த்தியடையவில்லை என தெரிந்தும், சம்மதித்துள்ளனர். கடந்தாண்டு பிப்.5ல் தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் சிறுமிக்கு திருமணம் நடந்தது. தற்போது சிறுமி 4 மாத கர்ப்பவதியாக உள்ளார். ஒன்றிய அலுவக விரிவாக்க அலுவலர் புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சிறுமியை திருமணம் செய்த வீரக்குமார், இவரது பெற்றோர்கள் செல்லப்பாண்டி, செல்வராணி, சிறுமியின் பெற்றோர்கள் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தோட்டத்தில் மணல் பதுக்கியவர் மீது வழக்கு
தேனி: கொடுவிலார்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் தனியார் தென்னந்தோப்பில் ஆற்று மணல் பதுக்கியதாக கிடைத்த தகவலில் வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் ஞானசேகரன் மகன் தெய்வேந்திர பிரபுவின் தென்னந்தோப்பு என தெரிந்தது. அங்கிருந்த 20 டிராக்டர் மணலை கனிமவளத்துறையினருக்கு தெரிவித்து தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தெய்வேந்திரபிரபு மற்றொரு நபருக்கு தோப்பினை குத்தகைக்கு பள்ளபட்டி சிவபெருமாள் எடுத்திருந்தார். இவர் மணல் வாங்கி குவித்தது வருவாய்த்துறை விசாரணையில் தெரிந்தது. கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ., கீதா புகாரில் சிவபெருமாள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் விசாரிக்கிறார்.