முதியவர் தற்கொலை
தேனி: கோடாங்கிபட்டி இந்திராகாலனி குருசாமி 69. கடந்த 5 ஆண்டுகளாக அதிக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். சிகிச்சை பெற்றும் வயிற்று வலி தீராததால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். டூவீலர், கார் விபத்தில் இருவர் காயம்
தேனி: பெரியகுளம் சருத்துப்பட்டி இந்திராகாலனி அசோக் 30. இவர் தனது டூவீலரில் அத்தை மகன் உதயபிரகாஷை 27, அமர வைத்து அல்லிநகரத்தில் இருந்து பெரியகுளம் ரோட்டில் சென்றார். அப்போது தனியார் ஓட்டல் அருகே திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விவேகானந்தர் தெரு சதீஸ்குமார் 31, ஓட்டி வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரில் வந்த அசோக், உதயபிரகாஷ் காயம் அடைந்தனர். இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அல்லிநகரம்போலீசார் விசாரிக்கின்றனர்.
நின்றவர் மீது ஆட்டோ மோதி விபத்து
தேனி: பழனிசெட்டிபட்டி ஜவஹர் நகர் தெரு முத்துக்குமார் 28. கொத்தனார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பதிவு எண் இல்லாத மூன்று ஆட்டோ மோதி விபத்து நடந்தது. இதில் முத்துக்குமாருக்குஇடது கை, தலையில் காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.