நுாலகத்தில் திருட்டு
தேனி: ஜங்கால்பட்டி கிளை நுாலக அலுவலர் மலர்விழி 35. இவர் ஆக.26ல் நுாலகத்தில் பணி முடிந்து, வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் நுாலக கதவு உடைந்து இருந்தது. நுாலகத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பிரிண்டர், பயோமெட்ரிக் மானிட்டர் கருவி, சார்ஜர் உள்ளிட்டவை பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
கொத்தனார் தற்கொலை
தேனி: சின்னமனுார் சாமிகுளம் முதல் தெரு கொத்தனார் உத்திரபாண்டியன் 43. இவரது மனைவி முத்தீஸ்வரி 40. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். உத்திரபாண்டியன் அடிக்கடி மது குடித்து வீட்டிற்கு வந்ததால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு முன் மது குடித்து கணவர் வீட்டிற்கு வந்ததால் கோபம் அடைந்த மனைவி இளைய மகனை அழைத்துக் கொண்டு கோவையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். பலமுறை கணவன் அழைத்தும் வரவில்லை. இதனால் வீட்டில் இருந்து விஷத்தை உத்திரபாண்டிஆக. 26ல் குடித்து, தேனி அரசுமருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
முதியவர் தற்கொலை
தேனி: சின்னமனுார் அய்யம்பட்டி தெற்குத்தெரு ராஜா 74. சர்க்கரை நோயால் பாதித்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன வேதனையில் இருந்தவர், வீட்டில் விஷம் குடித்துவிட்டார். மகன் சிவானந்தம் தந்தையை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.