மாமியாரை தாக்கிய மருமகன் கைது
போடி: மணியம்பட்டி மேற்கு தெரு நாராயணன் 35. இவரது மனைவி திவ்யா 29. இரண்டு மகன்கள் உள்ளனர். நாராயணன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். திவ்யா புகாரில் போடி தாலுகா போலீசார் நாராயணனை ஆறு மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த நாராயணன் நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த மனைவி திவ்யாவை தாக்கினார். தடுக்க வந்த மாமியார் நாகமணியை அரிவாளால் தலை, முதுகில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். நாகமணி புகாரில் போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்தனர்.
மனைவி மாயம்: கணவர் புகார்
போடி: கரட்டுப்பட்டி கட்டபொம்மன் தெருவில் வசிப்பவர் வீரஜக்கையன் 25, இவரது மனைவி நித்யா 22. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நித்யா தனது குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீரஜக்கையன் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பதுக்கியவர் கைது
போடி: ராசிங்காபுரம் அழகர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் 19. இவர் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார். போடி தாலுகா போலீசார் கண்ணனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில் பதுக்கியவர் கைது
தேனி: தேனி மதுவிலக்கு போலீசார் கொடுவிலார்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி உப்பார்பட்டி தியாகராஜபுரம் முத்தையா 41.,என்பவர் 27 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து,மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
மயங்கியவர் இறப்பு
தேனி: சமதர்மபுரம் பக்தவச்சலம் தெரு வெங்கடேஷ்வரன் 46. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தங்கை வீட்டில் இருந்தார். இவருக்கு படபடப்பு ஏற்பட்டுமயங்கியவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்கைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.