பெண் மாயம்: தாய் புகார்
ஆண்டிபட்டி: காமராஜர் நகரை சேர்ந்தவர் ஞானகுமாரி 45, கணவரை பிரிந்த இவர் தனது மகள் யுவனி 26, என்பவருடன் வசித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் கடைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மகள் யுவனி, வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஞானகுமாரி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்
ஆண்டிபட்டி: மேலத்தெருவை சேர்ந்தவர் தவமணி 43, இவரது மகள் வினோதினி 19, தேனி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், கல்லூரியில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தை தவமணி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மகள் மாயம்: தந்தை புகார்
சின்னமனூர்: திருவள்ளுவர் பள்ளி தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் 55. இவர் தனது மகள் கிருஷ்ணவேணியை, இதே ஊரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் மருமகனுடன் கூட்டு குடும்பமாக வசித்தனர். கிருஷ்ணவேணி இங்குள்ள கடையில் வேலை செய்தார். இவர் செப்.12ல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மகளை பல இடங்களில் தேடிப் பார்த்தும், கண்டு பிடிக்க முடியவில்லை. தந்தை ஜெயப்பிரகாஷ் புகாரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்: இருவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: -பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் சந்தனம் 54. புஷ்பராணி நகர் குட்டிக்கரடு பகுதியில் 850 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை கைப்பற்றினர். சந்தனத்திற்கு கஞ்சாவை விற்க கூறிய புஷ்பராணி நகர் முத்துப்பாண்டி மனைவி இன்பவள்ளியை தேவதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.
மூதாட்டி மீது தாக்கு
சிறுவன் மீது வழக்கு
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா, செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலைச்சாமி 30. இவரது அண்ணன், அக்காவுடன் ஹைதராபாத்தில் முறுக்கு கம்பெனி வைத்துள்ளனர். இவரது தாயார் கருத்தம்மாள் 65. செங்குளத்துப்பட்டியில் பஞ்சாட்சரம் வீட்டில் ரூ.3 லட்சத்திற்கு ஒத்தியில் 5 ஆண்டுக்கு இருந்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாட்சரம் மகன் 17 வயது சிறுவன், கருத்தம்மாளிடம் கூடுதலாக ரூ.2 லட்சம் பணம் கேட்டு தகராறு செய்து தாக்கினார்.
இதில் காயமடைந்த கருத்தம்மாள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலைச்சாமி புகாரில் தேவதானப்பட்டி போலீசார் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கி ணற்றி ல் தவறி
விழுந்து மூதாட்டி பலி
போடி: மல்லிங்காபுரம் கிழக்கு தெருவில் வசித்தவர் விருசின்னம்மாள் 80. இவர் அதே பகுதியில் நாகமணி என்பவர் தோட்ட கிணற்று மேட்டில் வளர்ந்து இருந்த புல், செடிகளை ஆட்டு குட்டிக்கு அறுப்பதற்கு சென்றார். எதிர்பாராத விதமாக 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்து கிடந்த வீருசின்னம்மாளின் சடலத்தை மீட்டனர். வீருசின்னம்மாளின் மகன் கருத்த பாண்டியன் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.