போதையில் தகராறு
தேனி: பழனிசெட்டிபட்டி வசந்தம் நகர் விஷ்ணு 34. இவரது தந்தை ராமதாஸ் 60. தேனி கம்பம் ரோட்டில் உள்ள டீ கடையில் வேலை பார்க்கிறார்.
அந்த கடைக்கு விஷ்ணு, அவரது தாயார் ஜானகி அம்மாள் சென்றனர். அப்போது டீ கடைக்கு ஜங்கால்பட்டி லட்சுமிபுரம் கண்ணன் மதுபோதையில் வந்தார். வடை சாப்பிட்டு அங்கேயே படுத்தார். இதனை ராமதாஸ், விஷ்ணு, அவரது தாயார் ஜானகி அம்மாள் இணைந்து, எழுப்பினர். கண்ணன் மூவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
பால்பண்ணை ஊழியர் இறப்பு
தேனி: வயல்பட்டி முருகேசன் 46. தாடிச்சேரியில் தனியார் பால்பண்ணையில் வேலை பார்த்தார். மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் வயிற்கு வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்கள் மது குடிப்பதை நிறுத்தக் கூறினர்.
ஆனாலும் மது குடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமாக உள்ளதாகவும், மாலை மருத்துவமனை செல்லலாம் என வீட்டில் கூறினார்.
இந்நிலையில் உடன் வேலை பார்ப்பவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவர்மீது மது வாடை வீசியது. இதனால் அவரது மாமியார் குளித்து விட்டு வருமாறும், பின் மருத்துவமனை செல்லலாம் எனக் கூறினார்.
சிறிது நேரத்திற்கு பின் முருகேசன் அப்பகுதியில் உள்ள மயானத்தில் மயங்கி கிடப்பதாக அவரது மனைவி ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸில் வந்தவர்கள் பரிசோதித்த போது முருகேசன் இறந்திருந்தார். ராஜேஸ்வரி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
தேனி: போடி முனிசிபல் காலனி கூலித்தொழிலாளி பாண்டி 27. இவரது மனைவி ஐஸ்வர்யா 24. இவர்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தேனியில் உள்ள மருத்துவமனைக்கு வந்தனர்.
கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் குழந்தையை பாண்டியிடம் கொடுத்து விட்டு, மருந்து வாங்கி வருவதாக கூறி ஐஸ்வர்யா சென்றார். திரும்பி வரவில்லை. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.