/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புற்றுநோய் நவீன சிகிச்சைக்கு தேனி துளிர் மருத்துவமனை
/
புற்றுநோய் நவீன சிகிச்சைக்கு தேனி துளிர் மருத்துவமனை
புற்றுநோய் நவீன சிகிச்சைக்கு தேனி துளிர் மருத்துவமனை
புற்றுநோய் நவீன சிகிச்சைக்கு தேனி துளிர் மருத்துவமனை
ADDED : அக் 02, 2025 04:10 AM

தே னியில் பெரியகுளம் ரோட்டில் அன்னஞ்சி விலக்கில் துளிர் மருத்துவமனை அமைந்துள்ளது. துளிர் ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு நவீன மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜீவாசிங்கராஜ் எம்.எஸ்., டி.ஆர்.என்.பி சர்ஜன்.
புற்றுநோய் நிபுணரான இவர் அறுவை சிகிச்சையில் சிறந்தவர். இங்கு 24 மணி நேர சிகிச்சை வசதிகள் உள்ளன. புற்றுநோய் அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவ சிகிச்சை, பரிசோதனை, கதீர்வீச்சு சிகிச்சை, ஆலோசனை, இறுதிநிலை பராமரிப்பு சிகிச்சை, 24 மணி நேர அவசர சிகிச்சை, பொது மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, ரத்த பரிசோதனை மையம், வெண்டிலேட்டர் வசதி கொண்டதீவிர சிகிச்சைப் பிரிவு உட்பட நோய்கண்டறிதல், சிகிச்சை என அத்தனைக்கும் தேவையான வசதிகள் இங்குஉள்ளன.
எனவே புற்றுநோய்க்கு இனி பயப்பட வேண்டியது இல்லை. புற்றுநோய் வந்து விட்டால் வாழ்வு முடிந்தது என அஞ்ச வேண்டியது இல்லை. பெரும் நகரங்களுக்கு சென்று பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டிய அவசியமும் இல்லை.துளிர் மருத்துவமனையின் சிகிச்சை மற்றும் ஆலோசனையுடன் புற்றுநோய் பாதித்தவர்கள் நீண்ட காலம், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முடியும். கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் 82707 97070, 82707 67070 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள லாம்.