மதுபாட்டில் பதுக்கியவர் கைது
தேனி: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அல்லிநகரம் வெங்கலா கோயில் அருகே ரோந்து சென்றனர்.
அதேப்பகுதி கர்ணன் 40, விற்பனைக்காக 39 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், ரூ.7020 மதிப்புள்ள மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர். பட்டாசு வெடித்து கொலை மிரட்டல்
தேனி: பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் ஒத்த மா மரத்தெருவை சேர்ந்த கொத்தனார் ஸ்டாலின் 20. இவருக்கு 5 மூத்த சகோதரிகள் உண்டு. ஸ்டாலின் சகோதரி எஸ்தரின்கணவர் அருள் உட்பட உறவினர்கள் வீட்டின் அருகில் அமர்ந்திருந்தனர். தீபாவளி அன்று இரவு இதே பகுதியை சேர்ந்த ஷாம் 26. பட்டாசுகளை இவர்கள் பக்கம் செல்லும் படி வெடித்தார். இதனை அருள் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த ஷாம், ஸ்டாலின், அவரது மாமா அருள், சகோதரிஜெயப்பிரியா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.