விபத்தில் பெண் வழக்கறிஞர் காயம்
தேனி: பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெரு சரண்குமார் 37. வணிக பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி வழக்கறிஞர் பரணி 33. இவர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். நவ.4ல் காலையில் வீட்டில் இருந்து கோர்ட்டிற்கு வழக்கறிஞர் பரணி டூவீலர் ஒட்டி சென்றார். பொம்மையக்கவுண்டன்பட்டி காளவாசல் பிரிவு பைபாஸ் ரோட்டில் சென்ற போது எதிரே பொம்மையக் கவுண்டன்பட்டி முருகானந்தம் 52, ஓட்டிவந்த டூவீலர், வழக்கறிஞர் டூவீலர் மீது மோதியதில் கீழே விழுந்த பரணிக்கு காயம் ஏற்பட்டது. அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
தேனி: தேவாரம் ஹனீபா காலனி அப்பாவு பிள்ளை நகர் இளங்கோவன் 65. இவரது மகன் பால்பாண்டி 32. தந்தையும் மகனும் இணைந்து வெல்டிங் தொழில் செய்து வந்தனர். ஓராண்டுக்கு முன் மகன் தனியாக வெல்டிங் கடை துவங்கி நடத்தி வந்தார். இதில் கடன் ஏற்பட்டு மனம் வெறுத்து மது போதைக்குஅடிமையாகி, திருமணம் முடியாமல் இருந்தது. இந்நிலையில் தந்தையிடம் மது குடிக்க பணம் கேட்டார். தந்தை பணம் வழங்க மறுத்தார். இதனால் மனம் வெறுத்த மகன் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை
தேனி: போடி புதுார் முதல் வார்டு சவுந்திரவேல் நகர் மல்லிகா 50. இவரது மகள் சோனியா 30. இவர்11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்து முதல்கணவருடன் விவாகரத்து பெற்று தாயுடன் வசித்தார். பின் தேனி கோல்டு கம்பெனியில் பணிபுரிந்த போது சோனியாவிற்கும், வருஷநாட்டை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பாரஸ்ட் ரோடு 2வது தெருவில் வசித்தனர். அதன்பின் காமாட்சி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். மன உளைச்சலில் இருப்பதாக சோனியா, தாயாரிடம் தெரிவித்தார். நேற்று நவ. 5 அதிகாலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒரு மாத பெண் சிசு உயிரிழப்பு
தேனி: வருஷநாடு உப்புத்துறை கிழக்குத்தெரு ராஜ்குமார் 30. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி 26. இத்தம்பதிக்கு நாலரை வயதில் மகள் தனஞ்ஜெயாஉள்ளார். இந்நிலையில் 2025 அக்.2ல் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெயலட்சுமிக்கு 2வது பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் குழந்தைக்குஇருதயம், மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி சீமாங் சென்டரில் 15 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. நவ. 5ல் மதியம் முதல் குழந்தை பால் குடிக்காமல் அழுது கொண்டே இருந்தது. இரவு 10:00 மணிக்கு கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை டாக்டர் பரிசோதித்த போது குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்சோவில்4பேர் மீது வழக்கு
போடி: சவுந்திரவேல் நகரில் வசிப்பவர் பிரகாஷ் 27. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்ப தாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். சிறுமி என தெரிந்தும் உடந்தையாக பிரகாஷின் தாயார் அமுதா 48. சிறுமியின் தாய், தந்தை இருந்துள்ளனர். போடி அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ், அமுதா உட்பட நான்கு பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
டூவீலர் விபத்து: இருவர் காயம்
போடி: பெரியகுளம் அருகே செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெரு நேதாஜி 40. இவர் போடி அரசு மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனை வேலை முடிந்து, இவருடன் பணியாற்றும் மகாலட்சுமி 35, போடி போஜன் பார்க் பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து சென்றார். பின் பக்கமாக போடி நாட்டாண்மைகாரர் தெரு தங்கமணி 29, டூவீலரில் அதிவேகமாக வந்து இருவர் மீது மோதினார். பலத்த காயம் அடைந்த நேதாஜி, மகாலட்சுமி இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேதாஜி புகாரில் போலீசார் தங்கமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விஷம் குடித்து தற்கொலை
போடி: சுப்புராஜ் நகர் புதுக் காலனியில் வசித்தவர் பஞ்சவர்ணம் 40. திண்டுக்கல்லில் வசித்து வரும் இவரது தங்கை மஞ்சுளா மகள் செல்வி பத்து நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பஞ்சவர்ணம் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இவரது மகன் வினோத்குமார் 26,ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் பஞ்சவர்ணம் விஷம் குடித்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு பலன் இன்றி நேற்று இறந்தார். வினோத்குமார் புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நீதிராஜன் 40. கொடைக்கானலில் 20 கிராம் கஞ்சா வாங்கி, கெங்குவார்பட்டி பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்தார். தேவதானப்பட்டி சிறப்பு எஸ்.ஐ., பாலமுருகன், நீதிராஜனிடம் கஞ்சாவை கைப்பற்றி கைது செய்தார்.

