/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் செய்திகள்...(லோகோ வைக்கவும்)
/
போலீஸ் செய்திகள்...(லோகோ வைக்கவும்)
ADDED : ஜூன் 30, 2025 04:25 AM
சிறுமி கர்ப்பம்: ஒருவர் மீது போக்சோ
பெரியகுளம்: மதுரை பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியை, தேவதானப்பட்டியைச் சேர்ந்த அழகுபாண்டி 22, திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கினார். பெரியகுளம் ஒன்றிய ஊர் நல அலுவலர் மாரியம்மாள் புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, அழகுபாண்டி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.
கஞ்சா பதுக்கியவர் கைது
ஆண்டிபட்டி: ராஜதானி அருகே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். சித்தார்பட்டி விலக்கில் சந்தேகப்படும் படி பதிவு எண் இல்லாத டூவீலரில் சென்றவரை நிறுத்தி விசாரித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் 80 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சா வைத்திருந்த சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் 25, என்பதும், உசிலம்பட்டியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, அப்பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில்கள் பதுக்கிய இருவர் கைது
தேனி: பழனிசெட்டிபட்டி போலீசார் பூதிப்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாழையாத்துப்பட்டி பிரிவில் சட்ட விரோத விற்பனைக்காக 76 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் 25, பிரபு 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
டூவீலர் வேன் விபத்தில்
சிறுவர்கள் உட்பட மூவர் காயம்
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே எருமலை நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்குமார் 24. இவரது அக்காவிற்கு பவிக் ஷா 10, கோகுலேஷ் 8 என மகள், மகன் உள்ளனர். இவர்களுடன் டூவீலரில் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார். பொம்மிநாயக்கன்பட்டி அருகே எதிரே வந்த வேன், டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. இதில் டூவீலரில் வந்த மூன்று பேரும் காயமடைந்தனர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெயமங்கலம் போலீசார் விபத்து ஏற்படுத்திய தேவதானப்பட்டியைச் சேர்ந்த அப்பாஸ் 58, மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.-