/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏட்டு உயிரிழப்பு; போலீசார் இறுதி மரியாதை
/
ஏட்டு உயிரிழப்பு; போலீசார் இறுதி மரியாதை
ADDED : ஆக 19, 2025 12:58 AM

தேனி; பெரியகுளம் கைலாசப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி 40. 2016ல் போலீஸ்காரராக பணியில் சேர்ந்து தற்போது அல்லிநகரம் ஸ்டேஷனில் ஏட்டாகஇருந்தார். இவருக்கு கல்லீரல் பாதித்து கடந்த வாரம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
அவரின் உடல் கைலாசபட்டிக்குஎடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
தேனி டி.எஸ்.பி., தேவராஜ், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் இளவரசன், எஸ்.ஐ.,கண்ணன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சண்முகசுந்தரம், ஈஸ்வரன், முருகன் மற்றும் போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மனைவி பிரியா மட்டும் உறவினர்கள் உடனிருந்தனர்.