/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சொகுசு கார் வாங்கி தருவதாக மோசடி ரூ.20.25 லட்சத்தை மீட்ட போலீஸ்
/
சொகுசு கார் வாங்கி தருவதாக மோசடி ரூ.20.25 லட்சத்தை மீட்ட போலீஸ்
சொகுசு கார் வாங்கி தருவதாக மோசடி ரூ.20.25 லட்சத்தை மீட்ட போலீஸ்
சொகுசு கார் வாங்கி தருவதாக மோசடி ரூ.20.25 லட்சத்தை மீட்ட போலீஸ்
ADDED : ஆக 03, 2025 08:20 AM

பாலக்காடு: குறைந்த விலைக்கு சொகுசு கார்கள் வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்த சம்பவத்தில், 20.25 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அலநல்லூரைச் சேர்ந்த ரிதின் நாராயணன், 24, என்பவர், சமூக வலைதள பக்கத்தில், குறைந்த விலைக்கு புதுடில்லியில் இருந்து சொகுசு கார்கள் வாங்கித் தரப்படும் என்ற பதிவை கண்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியவர், அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு, 20.50 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
அதன்பின், சொகுசு காரும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். ஜூன், பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சசிகுமார் விசாரணையில், புகார்தாரரின் வங்கி கணக்கில் இருந்து, போலி வணிக நிறுவனத்தின் பெயரிலுள்ள வங்கி கணக்கில், 20.50 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாலக்காடு மாவட்ட தலைமை நீதிமன்றத்தின் அறிக்கை அடிப்படையில், அந்த வங்கி கணக்கில் இருந்து, 20.25 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டு, புகார்தாரரின் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறுகையில், ''புகார்தாரரிடம் முன்பணமாக, 50,000 ரூபாயை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். அதன்படி பணத்தை செலுத்தியுள்ளார். பின், நண்பனுடன் புதுடில்லிக்கு சென்று, 20 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வாங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். இந்த மோசடியில் தொடர்புள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.