/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒன்றிய பொறியாளரை மிரட்டிய ஒப்பந்ததாரர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது
/
ஒன்றிய பொறியாளரை மிரட்டிய ஒப்பந்ததாரர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது
ஒன்றிய பொறியாளரை மிரட்டிய ஒப்பந்ததாரர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது
ஒன்றிய பொறியாளரை மிரட்டிய ஒப்பந்ததாரர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது
ADDED : ஆக 08, 2025 02:19 AM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய இளநிலை பொறியாளர் தெய்வலட்சுமியின் 51, அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்து சென்ற ஒப்பந்ததாரர் கோத்தலுாத்து செல்வக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த அலுவலக வளாகத்தில் இளநிலை பொறியாளர் தெய்வலட்சுமி நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது கோத்தலுாத்தைச் சேர்ந்த செல்வகுமார் அங்கு சென்றார்.
அவர், ''தான் பழைய கோட்டை பள்ளிக்கூடம் கட்டுமான பணிக்கு டெண்டர் எடுத்துள்ளேன். அந்த இடத்தில் வேலை செய்யப்போகிறேன். அந்த இடத்தில் பிரச்னை இருக்கிறது,'' என தெய்வலட்சுமியிடம் தெரிவித்தார்.
செல்வகுமாரிடம் மறுநாள் காலை இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என தெய்வலட்சுமி தெரிவித்துள்ளார். அப்போது செல்வகுமார் அவரை தரக்குறைவாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து தெய்வலட்சுமி அளித்த புகாரின்படி எஸ்.ஐ., பாஸ்கரன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.