/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'சீல்' வைக்க தயக்கம் காட்டும் போலீசார், வருவாய்த்துறை சில்லரை மது விற்பனை தாராளம்

ADDED : ஜூலை 25, 2025 03:00 AM
தேனி: மது தடுப்பு திருத்தச் சட்டம் 2024ன்படி கடைகளில் மது அருந்தினால், அனுமதித்த கடைகள் 3 மாதங்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என்ற சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் மாவட்டத்தில் சட்டவிரோத சில்லரை மது விற்பனை குடிசை தொழிலாக மாறி வருகிறது.
தமிழகத்தில் கடந்தாண்டு ஆக.,ல் மது தடுப்பு திருத்த சட்டம் 2024 அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி அனுமதி பெற்ற மது பார்களை தவிர பிற கடைகள் உதாரணமாக மீன், சிக்கன் வருவல் கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகளில் மது அருந்தினால், மது அருந்த அனுமதித்தால் அந்த கடைகளுக்கு 'சீல்' வைக்கலாம்.
இந்த நடவடிக்கைகளை தாசில்தார் நிலையிலான அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டனர்.
ஆனால், மாவட்டத்தில் பல இடங்களில் பெட்டிகடைகள், சிக்கன், மீன் இறைச்சி கடைகளில் என மது குடிக்க அனுமதிப்பது, மது பாட்டில்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது. இச்சட்டத்தை பயன்படுத்தி அந்த கடைகளுக்கு 'சீல்' வைக்க வருவாய்த்துறையினரும், போலீசாரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன் கடைகள், வீடுகளில் வைத்து சட்ட விரோத மது விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது.
இதனால் குடிக்காதவர்களும் பாதிப்படைகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.