/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தை ஏற்படுத்தும் தனியார் மதுபார் விளம்பர பேனர்கள் கண்டு கொள்ளாத கலால், காவல்துறை

ADDED : செப் 28, 2025 03:30 AM
தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய ரோடுகளில் கவனத்தை திசை திருப்பி விபத்தை ஏற்படுத்தும் வகையில் தனியார் மதுபார் விளம்பர பதாகைகள் வைத்துள்ளன. அப்பகுதிகளில் விபத்துக்கள் நடந்தாலும் கலால் மற்றும் போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர்.
மாவட்டத்தில் தேசிய, மாநில, கிராம சாலை ஓரங்களில் பல்வேறு இடங்களில் தனியார் மதுபார்கள் செயல்படுகின்றன. சில பார்கள் மெயின் ரோட்டில் இருந்து சில மீட்டர் துாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில் விளம்பர பேனர்கள் வைத்துள்ளன. இவைகள் இரவில் பளிச் என தெரிய வேண்டும் என்பதற்காக வண்ண விளக்குகளால் அலங்கரித்து உள்ளனர்.
இந்த பேனர்கள், அலங்கார விளக்குகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்தை ஏற்படுத்துகின்றன. இது தவிர சில கனரக வாகன ஓட்டுநர்கள் இந்த விளம்பர பேனர்கள் அருகே இடையூறாக வாகனங்களை நிறுத்துகின்றனர். அப்பகுதியில் வரும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குகின்றன. குறிப்பாக தேனி புது பஸ் ஸ்டாண்ட், அன்னஞ்சி விலக்கு, பழனிசெட்டிபட்டி, மதுராபுரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த அவல நிலை தொடர்கிறது.
இவற்றை ஆய்வுகளுக்கு செல்லும் போது கலால் துறையினர், அவ்வழியாக செல்லும் போலீசார் கொள்வதில்லை. விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம், எஸ்.பி., நடவடிக்கை எடுக்க என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.