/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பரோலில் வந்த சென்னை மத்திய சிறை கைதி தலைமறைவு தேடும் போலீசார்
/
பரோலில் வந்த சென்னை மத்திய சிறை கைதி தலைமறைவு தேடும் போலீசார்
பரோலில் வந்த சென்னை மத்திய சிறை கைதி தலைமறைவு தேடும் போலீசார்
பரோலில் வந்த சென்னை மத்திய சிறை கைதி தலைமறைவு தேடும் போலீசார்
ADDED : ஜூலை 21, 2025 02:18 AM
உத்தமபாளையம்: சென்னை மத்திய சிறையில் இருந்த கைதி 15 நாட்கள் பரோலில் சொந்த ஊரான கம்பம் வந்த போது தலைமறைவான நிலையில் சிறை அலுவலர் புகாரில் உத்தமபாளையம் -போலீசார் தேடி வருகின்றனர்.
கம்பம் உத்தமபுரம் பத்ரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வீருகுட்டித்தேவர் மகன் கோட்டைச்சாமி 56. இவர் மீது கம்பம் வடக்கு போலீசார் 2014ல் பதிவு செய்த கஞ்சா வழக்கில் மதுரை போதைப்பொருட்கள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இவர் சென்னை மத்திய சிறையில் 2023 முதல் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கேட்டு மனு செய்தார். ஜூலை 3 ல் இருந்து 15 நாட்களுக்கு பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரோலில் கோட்டைச்சாமி கம்பம் வந்தார். தினமும் உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி சில நாட்கள் கையெழுத்திட்டு சென்றார். கோட்டைச்சாமி வராததால், வீட்டிற்கு உத்தமபாளையம் போலீசார் சென்றனர். வீட்டில் யாரும் இல்லை.
போலீசார் விசாரணையில் அவர் தலைமறைவானது தெரிய வந்தது. உடனடியாக மத்திய சிறைச்சாலைக்கு உத்தமபாளையம் போலீசார் தகவல் அளித்தனர். சென்னை மத்திய சிறை அலுவலர் முருகேசன் உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். கோட்டைச்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.