/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயியின் தோட்டத்து வீட்டில் 14 நாட்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றி விசாரணை

ADDED : ஜன 04, 2025 11:14 PM

கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக விவசாயி மச்சக்காளையின் 55, தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கடமலைக்குண்டு அருகே உப்புத்துறையைச் சேர்ந்தவர் மச்சக்காளை. இவர் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி காட்டுப்பன்றிகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்வதாக கடமலைக்குண்டு போலீசருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் உப்புத்துறை காளியம்மன் கோயில் அருகில் உள்ள அவரின் தோட்டத்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஆட்டுக்கொட்டத்தில் மஞ்சள் நிற துணி பையுடன் இருந்த மச்சக்காளை போலீசாரை கண்டதும் துணிப்பையை அங்கேயே விட்டு விட்டு தப்பினார்.
போலீசார் பையை பிரித்துப்பார்த்த போது விலங்குகளின் கொழுப்பு தடவப்பட்ட 9 நாட்டு வெடிகுண்டுகளும், வெள்ளைநுால் கட்டப்பட்ட 3 நாட்டு வெடிகுண்டுகளும், பச்சை வெள்ளை நிறங்களில் நுால் சுற்றப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகளும் இருந்தன.
அவற்றை கைப்பற்றிய போலீசார் மச்சக்காளையை தேடி வருகின்றனர்.