/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் தொடர் திருட்டு போலீசார் கண்காணிப்பு தேவை
/
கம்பத்தில் தொடர் திருட்டு போலீசார் கண்காணிப்பு தேவை
கம்பத்தில் தொடர் திருட்டு போலீசார் கண்காணிப்பு தேவை
கம்பத்தில் தொடர் திருட்டு போலீசார் கண்காணிப்பு தேவை
ADDED : நவ 05, 2024 06:00 AM
கம்பம்: கம்பம், சின்னமனூர் நகரங்களில் கடைகள், வீடுகளில் புகுந்து திருடர்கள் தொடர் கை வரிசை காட்டி வருவதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்பம் பகுதியில் டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து வரும் வழிப்பறி திருடர்கள் நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் செயின்களை பறித்து செல்வது,வீடுகள், கடைகளை உடைத்து திருடும் செயல் கடந்த சில நாட்களாக போலீசாருக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
கம்பம் மெயின்ரோட்டில் தீபாவளிக்கு மறுநாள் பழைய இரும்பு கடை மற்றும் அருகில் இருந்த ஒட்டல் என இரண்டு கடைகளை உடைத்து ஒட்டலில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர்.
மறுநாள் சுருளிப்பட்டியில் கோழிக்கறி கடையை உடைத்து ரூ.31 ஆயிரம் திருடி சென்றனர். அதே நாளில் கம்பம் மெயின்ரோட்டில் மெர்க்கண்டைல் வங்கி ஏ.டி.எம்., ஐ உடைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
சின்னமனூரில் பில்டிங் சொசைட்டி வீதியில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து ரூ.7 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
இன்னமும் பல திருட்டுக்கள் நடந்திருந்தாலும் புகார் அளிக்க முன்வராமல் உள்ளனர். எனவே குற்றததடுப்பு போலீசார் கறுசுறுப்பாக பணியாற்றி மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும்.

