/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் கலவரங்களில் ஈடுபடுவோர் ரவுடிகள் மீது போலீஸ் கண்காணிப்பு தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

ADDED : மார் 05, 2024 04:22 AM
போடி : கலவரங்களில் ஈடுபடுவோர், ரவுடிகள், பிடிவாரண்ட் குற்றவாளிகளை போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை துவங்கி உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு போலீசார் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தேர்தலில் எந்த ஒரு பகுதிகளிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் கலவரங்கள் நடந்த பகுதிகள் விபரங்கள், அதற்கான காரணங்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்களின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், அவர்களின் தற்போதைய நிலை ஆகிய முழு விவரங்கள் மாவட்ட போலீஸ் சார்பில் சேகரிக்கப்பட்டு டி.ஐ.ஜி., அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
தேர்தல் காலத்தில் கலவரத்தில் ஈடுபடும் பிரச்சனைக்குரிய நபர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள், பிடிவாரன்டு கைதிகளை கண்டறிந்து அவர்களை தேர்தல் முடியும் வரை போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வரவும், உரியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கலவரங்களில் ஈடுபட்டவர்களில் சிலர் வேலைகளுக்காக வெளியூர் சென்றிருந்தாலும் அங்குள்ள போலீசருக்கு தகவல் அளித்து அவர்களை போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
குற்ற வழக்கில் ஈடுபட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலை மறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றார்.