/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குற்றப்பிரிவை மீண்டும் ஏற்படுத்த போலீசார் வலியுறுத்தல்
/
குற்றப்பிரிவை மீண்டும் ஏற்படுத்த போலீசார் வலியுறுத்தல்
குற்றப்பிரிவை மீண்டும் ஏற்படுத்த போலீசார் வலியுறுத்தல்
குற்றப்பிரிவை மீண்டும் ஏற்படுத்த போலீசார் வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 04:38 AM

சமீபத்தில் சிவகங்கையில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற அஜித்குமார் இறந்த சம்பவத்திற்கு பின் போலீசார் கைதான நிலையில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது.
இதன் பின் டி.ஜி.பி., உத்தரவில் மாநிலத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் செயல்பட்டு வந்த கிரைம் டீம் (எஸ்.பி., டீம், டி.எஸ்.பி., டீம்,) உள்ளிட்ட தனிப் பிரிவுகள் கலைக்கப்பட்டன. அதில் பணியாற்றிய எஸ்.ஐ., இதர போலீசார் சட்டம் ஒழுங்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பதிவாகும் திருட்டு, கொள்ளை வழக்குகளில் விசாரணையில் தொய்வு ஏற்படும் நிலை எழுந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களால் இந்த திருட்டு வழக்குகளில் கவனம் செலுத்த முடியாது.
காரணம் வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலையில் எழுந்தவுடன் அரசியல் கட்சிகள் போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முக்கிய பிரமுகர்கள் வருகை, பாதுகாப்புப் பணிகள், இரு தரப்பு ஜாதி மோதல் பாதுகாப்பு, கோயில் திருவிழா, சாட்சி சொல்ல நீதிமன்றங்களுக்கு செல்வது, என, நேரம் போதாமல் பணிபுரிகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் குற்றப்பிரிவு இயங்கி வந்தது. அதற்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசார் தனியாக நியமிக்கப்பட்டு, பணிகள் நடந்தன.
சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு தனித்தனியாக செயல்பட்டு வந்தது. எனவே மீண்டும் 'குற்றப்பிரிவை' ஏற்படுத்த, மாநில போலீஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நாள்தோறும்வேலை பளு அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்ட சம்பவத்திற்கு பிறகு திருட்டு வழக்குகளில் விசாரிக்கவே பயமாக உள்ளது. 'கிரைம் டீம்'களையும் கலைத்து விட்டனர். எனவே அந்த பணியும் சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் தந்தால், பணிப்பளு கூடி, ஒரு வேலையையும் உருப்படியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே முன்பிருந்தது போல ஸ்டேஷன் தோறும் தனித் தனியாக சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு என 2 ஸ்டேஷன்களை ஏற்படுத்த வேண்டும. இதனால் கொள்ளை, கொலை வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும். மாநில போலீஸ் தலைமை உத்தரவிட வேண்டும்., என்றனர்.