/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடியிருப்பில் குடிநீர் இன்றி போலீசார் டூவீலரில் எடுத்து வரும் அவலம்

ADDED : ஆக 04, 2025 04:41 AM
தேனி: தேனியில் போலீஸ் குடியிருப்பில் குடிநீர் கிடைக்காததால் டூவீலரில் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.
தேனியில் ஆயுதபடை மைதானம் அருகே வடக்கு, தெற்குப் பகுதிகளில் போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் தெற்குப் பகுதியில் அதாவது பெருந்திட்ட வளாகம் அருகே அமைந்துள்ள குடியிருப்பில் சுமார் 45க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
இந்த போலீசார் குடியிருப்பிற்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் குடிநீர் தேவைப்படும் போலீசார், டூவீலரில் வடக்கு போலீஸ் குடியிருப்பிற்கு சென்று அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எடுத்து வருகின்றனர்.
பின் அந்த நீரில் சமையல், குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.