/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் பாலிதீன் பயன்பாடு தாராளம்
/
தேனியில் பாலிதீன் பயன்பாடு தாராளம்
ADDED : ஜன 26, 2025 06:49 AM
தேனி : தேனி பஸ் ஸ்டாண்ட், நகரின் முக்கிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு, விற்பனை மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் கடந்த வாரம் நகராட்சி, உணவுப்பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த பொருட்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், அதிகாரிகள் சோதனை நடத்திய மறு நாளே அதே அளவிலான தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளில் வைத்துபொருட்கள் விற்பனை துவங்கி உள்ளது.
அதே போல் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பை மற்றும் பிளாஸ்டிக் விற்பனை, பயன்பாடு என்பது தாரளாமாக உள்ளது.
இதனை தடுப்பதற்கும் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்.