ADDED : ஜன 17, 2024 01:02 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் காந்தி நகரில் பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி, பி.டி.ஓ., திருப்பதிவாசகன் முன்னிலை வகித்தனர். குடியிருப்போர் நல சங்க தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில் பெண்களின் கோலாட்டம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், உதவி மின் பொறியாளர் தீபா, குடியிருப்போர் நல சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் காமராஜ், துணைச் செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காந்திநகர் பகுதிக்கு குடிநீர் வசதி, ரோடு வசதி, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

