/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா..
/
பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா..
ADDED : ஜன 14, 2025 05:54 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலையில் பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல், நிர்வாகி தமயந்தி, முதல்வர் உமாமகேஸ்வரி ஆகியோர் பொங்கல் விழா, தமிழர்களின் பண்பாடு, விளையாட்டுகள் குறித்து பேசினர். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்தனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகிணி, பாண்டிச்செல்வி, திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.
உத்தமபாளையம்: கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதல்வர் மோகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் விக்னேஸ் செய்திருந்தார். உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் எச். முகமது மீரான் வரவேற்றார்.
பேராசிரியைகளும், மாணவிகளும் இணைந்து பொங்கல் வைத்தனர். விழாவில் பேராசிரியர் அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஷாஜிதா பர்வீன் நன்றி கூறினார்.
கோம்பை : கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை சித்ரா தலைமை வகித்தார். பள்ளி செயலர் சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வல்லபை கோயிலில் பொங்கல் வைத்து உலக நன்மை வேண்டி பிரார்த்திக்கப்பட்டது.
தேனி: அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடந்தது. பள்ளி கல்வி சங்க செயலாளர் பாக்யகுமாரி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பரந்தாமன் முன்னிலை வகித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளைபள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
நாடார் சரஸ்வதி கலை அறிவியில் கல்லுாரில் நடந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள், கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு கயிறு இழுத்தல், பலுான் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் சித்ரா தலைமையில் துணைமுதல்வர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
போடி: ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் பொங்கல் சங்கமரம் விழா கல்லூரி தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ராமநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சொரூபன், ராதாகிருஷ்ணன், பிரபு, கமலநாதன், சி.பி.ஏ., சங்க நிர்வாகிகள் ஞானவேல், நித்தியானந்தன் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்தனர். சிலம்பாட்டம். தேவராட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கும்மி பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் இனாயத் உசேன் கான், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் காளிமுத்து, மாரிமுத்து, சேதுராம், சுப்பிரமணியம் ராமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பழனியாண்டி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.