
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சீனிவாசா நகர் செல்வ விநாயகர், ராஜகாளியம்மன் கோயில்கள் சார்பில், பொங்கல் விழா நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் மேளதாளம் முழங்க திருமஞ்சனக்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன.
2ம் நாளில் அம்மனுக்கு பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி, தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் சார்பில் அன்னதானத்தை ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,மகாராஜன் துவக்கி வைத்தார். நிறைவு நாள் நிகழ்ச்சியில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்துச் சென்றனர்.
மாலையில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் அம்மன் பூஞ்சோலை அடைந்தது. விழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கான கோலப் போட்டிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.