/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 4.27 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு
/
மாவட்டத்தில் 4.27 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு
மாவட்டத்தில் 4.27 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு
மாவட்டத்தில் 4.27 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு
ADDED : டிச 31, 2024 06:46 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள 4.27 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கான பணிகள் துவங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சீனி தலா ஒரு கிலோ, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் ஜன.,9ல் துவங்க உள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் முழுநேரம் இயங்க கூடிய ரேஷன் கடைகள் 489, மகளிர் கடைகள் 28 என மொத்தம் 517 கடைகள் இயங்குகின்றன. மாவட்டத்தில் அரிசி பெறும் ரேஷன் கார்டுகள், சீனி மட்டும் பெறும் ரேஷன் கார்டுகள், எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகள் என 4.33 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.இவற்றில் அரிசி பெறும் 4.27 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
தற்போது மாவட்டத்தில் சின்னமனுார், கோட்டூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 102 விவசாயிகள் 71.46 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கரும்பு சாகுபடி செய்ய கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது என்றனர்.