/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்
/
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 09, 2026 05:50 AM
தேனி: ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது.
தேனியில் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழாவிற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார்.
எம்.பி., தங்கதமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜகுமார், கூட்டுறவு இணை பதிவாளர் வாஞ்சிநாதன், கலெக்டர் நேர்முக உதவியாளர் வேளாண் வளர்மதி, தாசில்தார் சதீஸ்குமார், எம்.எல்.ஏ., சரவணக்குமார், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை, ரூ.3ஆயிரம் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 4.30லட்சம் ரேஷன்கார்டு தாரர்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

