/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் ரூ.47.34 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு
/
மாவட்டத்தில் ரூ.47.34 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு
மாவட்டத்தில் ரூ.47.34 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு
மாவட்டத்தில் ரூ.47.34 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு
ADDED : ஜன 12, 2024 06:33 AM
தேவதானப்பட்டி : தேனி மாவட்டத்தில் ரூ.47.34 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் பொங்கல் பரிசு வினியோகத்தை நேற்று முன்தினம் அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார். கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். அமைச்சர் பெரியசாமி பேசியதாவது: தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகளில், 4,26,971 ரேஷன் கார்டுதாரர்கள் ரூ.1,000 வீதம் ரூ.42.70 கோடியும், பொங்கல் பரிசு தொகுப்பிற்கு ரூ.4.64 கோடியும், என மொத்தம் ரூ.47.34 கோடி மதிப்பீட்டில் உங்கள் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை நேற்று முதல் (ஜன.10) ஜன.13 வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்ட நாளில் பெற இயலாதவர்கள் ஜன.14 ல் அன்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, ஒன்றிய தலைவர் தங்கவேல், கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ் செல்வி, துணைத் தலைவர் ஞானமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் செயலாளர் தமிழன் உட்பட பலர் பங்கேற்றனர்.