ADDED : ஜூலை 12, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி குப்பிநாயக்கன்பட்டி வனராஜ் 58, தபால்காரராக பணிபுரிந்தார்.
பெரியகுளத்தில் நடக்க இருந்த தபால்துறை தேர்வில் பங்கேற்பதற்காக வந்தவர் தேனி புது பஸ் ஸ்டாண்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடன் பணிபுரியும் விஷ்ணுபிரசாத்துக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தவர், 108 ஆம்புலனஸ் மூலம் வனராஜை தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வனராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

