/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் விலை... உயர்ந்தது; பதுக்கல் அதிகரித்ததாக விவசாயிகள் புலம்பல்
/
மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் விலை... உயர்ந்தது; பதுக்கல் அதிகரித்ததாக விவசாயிகள் புலம்பல்
மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் விலை... உயர்ந்தது; பதுக்கல் அதிகரித்ததாக விவசாயிகள் புலம்பல்
மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் விலை... உயர்ந்தது; பதுக்கல் அதிகரித்ததாக விவசாயிகள் புலம்பல்
UPDATED : ஆக 18, 2025 08:53 AM
ADDED : ஆக 18, 2025 03:16 AM

கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடி 2 போகம் நடைபெறுகிறது. 14 ஆயிரத்து 707 ஏக்கரில் லோயர்கேம்பில் ஆரம்பித்து தேனி வரை நடக்கிறது. தற்போது முதல் போகம் நடவு முடிந்து 40 நாட்களாகிறது. நெல் நடவு செய்த வயல்களில் 40 நாட்கள் முடிந்ததும், பயிர் வளர்ச்சிக்காக பொட்டாஷ் உரம் இடுவது அவசியமாகும். ஆனால் உரக்கடைகளில் பொட்டாஷ் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உரக்கடைக்காரர் ஒருவர் கூறியதாவது: பொட்டாஷ் பழைய விலை ஒரு மூடை ரூ.1550 ஆகும். புதிய விலை ரூ.1800 ஆகும். மூடைக்கு ரூ.250 அதிகரித்துள்ளது. இதனால் பொட்டாஷ் உர விற்பனையாளர்கள் பதுக்கி வைத்துள்ளனர். புதிய விலை அமல்படுத்தியவுடன் விற்றுக் கொள்ளலாம்.'' என, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர்., என்றார்.இதுகுறித்து நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் கூறியதாவது: பொட்டாஷ் உரம் கம்பம் பகுதியில் கிடைக்கவில்லை. கடைகளில் இருப்பு இல்லை என்கின்றனர். வேறு வழியின்றி கம்பத்தில் இருந்து தேனி சென்று வாங்கி வந்தேன். என்ன காரணம் என்பதைக் கூற மறுக்கின்றனர்.'', என்றார்.
வேளாண் அலுவலர் பிரசன்னா கூறியதாவது : மாவட்டத்திற்கு 270 மெ. டன் பொட்டாஷ் தேவைப்படுகிறது. தற்போது 510 டன் வரை இருப்பு உள்ளது. மாதந்தோறும் எவ்வளவு சப்ளை செய்ய வேண்டும் என்று கம்பெனிகளுக்கு நிர்ணயம் செய்துள்ளோம். ஐ.பி.எல்., நிறுவனம் 350 மெ. டன் இம்மாதம் சப்ளை செய்ய வேண்டும். கடந்த ஜூனில் விலை ரூ.1500ல் இருந்து ரூ.1800 ஆக உயர்ந்துள்ளது. உர மூடையில் எம்.ஆர்.பி., விலை என்ன அச்சிடப்பட்டுள்ளதோ, அதை விவசாயிகள் கொடுத்தால் போதும். அதற்கு மேல் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடுதல் விலைக்கு விற்கும் உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.