/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தை விசைத்தறி தொழிலாளர்கள் முற்றுகை 24வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்

ADDED : ஜன 24, 2025 01:47 AM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இப்பகுதியில் 5000க்கு மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு இடையே இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். கடந்த முறை ஏற்பட்ட ஒப்பந்தம் டிச.31ல் முடிந்தது.
புதிய ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால் ஜன. 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதனால் ரூ.பல கோடி மதிப்பிலான சேலை உற்பத்தியும்,தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதித்துள்ளது. திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
முற்றுகை : இந்நிலையில் பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி நேற்று டி.சுப்புலாபுரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் 4 கி.மீ.,துாரம் நடந்து ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு அருகே கூடினர். அங்குசக்கம்பட்டி விசைத்தறி தொழிலாளர்களுடன் இணைந்து மெயின் ரோடு வழியாக ஊர்வலம் சென்று ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் தந்த மனுவை பெற்ற தாசில்தார் கண்ணன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர். டி.எஸ்.பி.சண்முகசுந்தரம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.