UPDATED : நவ 19, 2026 04:10 PM
ADDED : நவ 19, 2026 04:10 PM
தேனி: தேனியில் உடைந்த மின்கம்பத்தை மாற்றம் செய்யும் போது குழாயை சேதப்படுத்தியதால் குடிநீர் வினியோகம் பாதித்து 22வது வார்டு பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
தேனி நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டில் சொசைட்டி தெரு உள்ளது. பெரியகுளம் ரோட்டில் மேற்கு சந்தை எதிரே உள்ள இத்தெரு வழியாக எளிதில் மதுரை ரோட்டிற்கு செல்லலாம். சில வாரங்களுக்கு முன் இந்த ரோட்டில் சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரியத்தினர் மாற்றம் செய்தனர்.
மாற்றம் செய்த போது நகராட்சி குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனை மின்வாரியத்தினர் கவனிக்காமல் பணிகளை முடித்து சென்றனர். அதனால் குடிநீர் வினியோகம் செய்யும் போது வீடுகளுக்கு செல்லாமல் குழாய் சேதமடைந்த பகுதியில் இருந்து வெளியேறி சாக்கடையில் செல்லகிறது. இது பற்றி நகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவிற்கு தகவல் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
