/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் துணை மின் நிலையத்தில் பவர் டிரான்ஸ்பார்மர் பழுது; பராமரிப்பு பணிகள் தீவிரம்

ADDED : பிப் 14, 2025 12:57 AM
கம்பம்; கம்பம் துணை மின் நிலையத்தில் பவர் டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதடைந்தது. அதிகாரிகள் பழுதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் உள்ளன. கம்பம் துணை மின்நிலையத்தில் உள்ள இரண்டு பவர் டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று பழுதடைந்தது.
இதனால் இப்பகுதி தோட்டங்களுக்கு சப்ளை பாதிக்கப்பட்டது.
செயற்பொறியாளர் சந்திர மோகன் , உதவி செயற்பொறியாளர் பாண்டியன் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து, வேளாண் இணைப்புக்கள் பாதிக்காத வகையில் உத்தமபாளையம்,வண்ணாத்தி பாறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் சப்ளை கொடுத்தனர். தற்போது பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் எம்.ஆர்.டி.பி. குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக செயற்பொறியாளர் சந்திர மோகன் கூறுகையில்,
பவர் டிரான்ஸ்பார்மில் காஸ் உருவானது . இதனால் ரிலே மூலம் அலாரம் அடித்தது . உடனடியாக சிறப்பு பணியாளர்கள் மூலம் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அதில் உள்ள ஆயிலை காலி செய்யும் பணி நடைபெறுகிறது . முழுமையாக பராமரிப்பு செய்து இன்னும் சில நாட்களில் தயாராகி விடும் . இதனால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.