/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருமான வரி சட்ட திருத்தம் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
/
வருமான வரி சட்ட திருத்தம் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
வருமான வரி சட்ட திருத்தம் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
வருமான வரி சட்ட திருத்தம் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
ADDED : மார் 01, 2024 01:03 AM
ஆண்டிபட்டி:சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் வணிகக் கடன்களை விரைவாக வசூலிக்க கொண்டு வரப்பட்டுள்ள வருமான வரி சட்ட திருத்தத்தை திரும்ப பெறக் கோரி ,தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதி விசைத்தறி நெசவாளர்கள் அரைநாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.
சிறு, குறு நிறுவனங்கள் வாங்கும் வணிகக் கடன்களை 45 நாட்களுக்கு மேல் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தால், அத்தொகையை வருமானமாகக் கருதி வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரியில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
இச்சட்டம் மார்ச் 31 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஜவுளி தொழில்களில் உற்பத்தியாகும் துணிகள் பதப்படுத்துதல், கலர் ஏற்றுதல், அச்சிடுதல், தையல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பின்னரே விற்பனைக்கு செல்கிறது. இதனால், 45 நாட்கள் அல்லது அதற்கு மேலான நாட்களில் கடனை திருப்பிச் செலுத்தும் நிலை ஏற்படும்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தத்தால் அத்தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.
இச்சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு பகுதியில் நுாற்றுக்கணக்கான ஜவுளி சார்ந்த கடைகள், கிடங்குகள், உற்பத்தி கூடங்கள் நேற்று முன்தினம் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர். விசைத்தறி உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: புதிய சட்ட திருத்தத்தால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்.
இதன் அடிப்படையில் ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆண்டிபட்டி பகுதியிலும் அரை நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

