/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செய்முறைத்தேர்வுகள் பிப்.7 ல் துவக்கம் கண்காணிப்பில் 800 ஆசிரியர்கள்

ADDED : பிப் 05, 2025 07:19 AM
தேனி: தேனி மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத்தேர்வுகள் பிப்.,7 ல் துவங்குகிறது. இத்தேர்வு கண்காணிப்பு பணியில் 800 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் முதல்வாரத்தில் துவங்குகிறது. மாவட்டத்தில் 140 பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் 13, 947 பேர், பிளஸ் 2 மாணவர்கள் 13,829 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கு இயற்பியல், வேதியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், தொழிற்கல்வியில் 15 பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது.
செய்முறைத்தேர்வுகள் பிப்.,7 முதல் பிப்., 22 வரை 98 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வு கண்காணிப்பு பணியில் 800 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
தேனி எடமால் தெருவில் உள்ள டி.எம்.எச்.என்.யூ., வித்யாலயா பள்ளியில் நடந்த கூட்டத்தில் பணிபுரிய உள்ள பள்ளிகள், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி ஆசிரியர்களுக்கு கல்வித்துறையினர் விளக்கினர்.