ADDED : பிப் 22, 2024 06:12 AM

தேனி : மாவட்டத்தில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் உள்ள சிவன் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். தேனி நகர்பகுதி, அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் சோலைமலை அய்யனார் கோயில் தெரு, பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பாரஸ்ட் ரோடு, சிவாஜிநகர், என்.ஆர்.டி., நகர் பகுதியில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
போடி: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள மூலவர் சிவன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன.