/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெப்ப அலை: ஏல விவசாயிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கை
/
வெப்ப அலை: ஏல விவசாயிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கை
வெப்ப அலை: ஏல விவசாயிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கை
வெப்ப அலை: ஏல விவசாயிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கை
ADDED : பிப் 17, 2025 05:04 AM
கம்பம், : இந்த கோடை பருவகாலத்தில் கூடுதல் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், ஏலக்காய் விவசாயிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க துவங்கி உள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் பீர்மேடு, நெடுங்கண்டம், தேவிகுளம் தாலுகாக்களில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது.
இந்தியாவின் மொத்த உற்பத்தியில் கேரளா 70 சதவீதத்தை பகிர்ந்து கொள்கிறது. மீதமுள்ள 30 சதவீதத்தை கர்நாடகா, தமிழகம் பகிர்கிறது. கடந்தாண்டு அதிக வெப்பம் மற்றும் கூடுதல் மழை காரணமாக மகசூல் பாதிப்பு 40 சதவீதம் வரை இருந்தது.
மகசூல் குறையும் போது விலை அதிகரிக்கும். ஆனால் ஏலக்காய்க்கு மட்டும் விதி விலக்காக உள்ளது. அதிகபட்சமாக சராசரி விலை கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு போனது. விலை கிடைக்காததற்கு மறுபதிவு ( Repolling ) மற்றும் தரம் குறைந்த காய்கள் வரத்து ஏற்பட்டுள்ளது காரணம் என்றாலும், உற்பத்தி செலவு அதிகரிக்கிறது.
இந்த சீசனில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடையை எதிர்கொள்ள தோட்டத்தை பச்சை வளை ( Green Net ) அமைப்பது, ஓடைகளில் வரும் நீரை மோட்டார் மூலம் பம்ப் செய்து, கிணறுகளில் சேமித்து வைப்பது, நிழல் தரும் மரங்களின் கிளைகளை வெட்டாமல் தவிர்ப்பது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஏலக்காய் விவசாயிகள் எடுக்க துவங்கி உள்ளனர். ஆனால் கோடை வெயிலில் இருந்து ஏலச் செடிகளை காப்பாற்ற முடியுமா என்பதை வரும் நாட்கள் தான் தீர்மானிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.