ADDED : ஜூலை 19, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் தொழிலாளியான மணிகண்டனின் சினை பசு, புலி தாக்கி இறந்தது.
அந்த பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலாத நிலையில், அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட எண் 18ல் இறந்து கிடந்ததை நேற்று காலை பார்த்தனர். பசுவின் பின்பகுதி இறைச்சி தின்ற நிலை காணப்பட்டதால், புலியிடம் சிக்கி பசு இறந்ததாக தெரியவந்தது. சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மணிகண்டனுக்குச் சொந்தமான ஒன்பது பசுக்கள் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி பலியான நிலையில் தற்போது எட்டு மாத கர்ப்பிணி பசு இறந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.