/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி வீட்டில் கர்ப்பிணி மனைவி போராட்டம்
/
கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி வீட்டில் கர்ப்பிணி மனைவி போராட்டம்
கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி வீட்டில் கர்ப்பிணி மனைவி போராட்டம்
கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி வீட்டில் கர்ப்பிணி மனைவி போராட்டம்
ADDED : மார் 15, 2024 01:47 AM

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே பிரிந்து சென்ற காதல் கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி கணவர் வீட்டில் அமர்ந்து கர்ப்பிணி காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
கோவை மாவட்டம் சூலூர் ராமச்சந்திரன் மகள் சவுந்தர்யா 26. இவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையாண்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் கோகுலகிருஷ்ணன் 24, என்பவரும் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது காதலித்துள்ளனர். இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கோகுல கிருஷ்ணன் பெற்றோர்சம்மதமின்றி சவுந்தர்யாவின் பெற்றோர் சம்மதத்தோடு கடந்த ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஓசூரில் குடும்பம் நடத்தினர். தற்போது சவுந்தர்யா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். கோகுல கிருஷ்ணன், சவுந்தர்யாவிடம் கூறிவிட்டு, கடந்த டிச. 8ல் சொந்த ஊர் சென்றார்.
அதன் பின் ஓசூருக்கு திரும்பாமல் சவுந்தர்யாவுடன் தொடர்பு இன்றி இருந்தார். அதிர்ச்சியடைந்த சவுந்தர்யா, கணவரை அலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்துள்ளார். இதனால் டிச.,14ல் சவுந்தர்யா தேனி போலீஸ் ஸ்டேஷனில் கணவருடன் சேர்த்து வைக்க கோரிபுகார் மனு கொடுத்தார்.
வழக்கு பதிவு செய்த க.விலக்கு போலீசார் கோகுல கிருஷ்ணனை தேடி வந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது கணவரை கண்டுபிடித்து தர கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே கோகுலகிருஷ்ணன் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை. சவுந்தர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இன்றி பிரிந்து சென்றதாகவும் கூறியதால் ஆட்கொணர்வு மனு முடித்து வைக்கப்பட்டது.
நேற்று கோவையில் இருந்து தனது உறவினர்களுடன் வந்த சவுந்தர்யா மலையாண்டி நாயக்கன்பட்டியில் உள்ள கோகுல கிருஷ்ணன் வீட்டில் அமர்ந்து கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.க.விலக்கு எஸ்.ஐ., பிருந்தா, சவுந்தர்யா உடன் பேசி விசாரணைக்காக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

